தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு! - கே.எல்.ராகுல்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

KXIP vs RR toss update
KXIP vs RR toss update

By

Published : Sep 27, 2020, 7:03 PM IST

Updated : Sep 27, 2020, 7:09 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தொடக்கம் முதலே பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.

இந்நிலையில் இத்தொடரில் இன்று(செப்.27) நடைபெறவுள்ள 9ஆவது லீக் ஆட்டத்தில், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சார்ஜா சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திவேத்தியா, அங்கித் ராஜ்புட்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், கிளென் மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரான், கரூண் நாயர், சர்ப்ராஸ் கான், ஜேம்ஸ் நீஷம் முகமது ஷமி, ஷெல்டன் காட்ரெல், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய்.

இதையும் படிங்க:தோனியின் சாதனையை முறியடித்த அலிஸா ஹீலி!

Last Updated : Sep 27, 2020, 7:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details