ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டி நவம்பா் 10 அன்று நிறைவு பெறுகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, லீக் சுற்று முடிவடைந்துள்ள நிலையில், மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய அணிகள் முதன் நான்கு இடங்களை பிடித்துள்ளன.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் அதிக ரன்களை எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 15 வீரர்களில் குறைந்த பவுண்டரிகள் அடித்தது விராட் கோலிதான். இதுவரை நடைபெற்ற 14 போட்டிகளில், 460 ரன்களை குவித்துள்ள விராட் கோலி, அதில் 302 ரன்களை ஓடி எடுத்துள்ளார்.