ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தொடக்கம் முதலே பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று(செப்.23) நடைபெறவுள்ள ஐந்தாவது லீக் ஆட்டத்தில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.