ஐபிஎல் தொடரில் இன்று (அக்.3) நடைபெற்று வரும் 16ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற கேகேஆர் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய டெல்லி அணியில் ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான், விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் - ப்ரித்வி ஷா இணை, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விரட்டினர்.
அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா, ஐபிஎல் தொடரில் தனது ஏழாவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார். பின்னர் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ப்ரித்வி ஷா ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் அதிரடி காட்டி வந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் தொடரில் தனது 14ஆவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அவருடன் இணைந்த ரிஷப் பந்தும் தனது பங்கிற்கு பவுண்டரிகளை பறக்க விட்டார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்களையும், ப்ரித்வி ஷா 66 ரன்களையும் எடுத்தனர்.
இதையும் படிங்க: இர்ஃபான் ட்விட்டுக்கு பதிலளித்த ஹர்பஜன்!