ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (அக். 28) நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு படிகல், பிலீப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த படிகல் ஐபிஎல் தொடரில் தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது.
இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதில் விராட் கோலியின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 100ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஐபிஎல் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா ஏழாவது இடத்தைப் பிடித்தார்.
மேலும் இதில் ஆச்சரியப்படுத்தும் வகையில் 2013ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான பும்ரா, தனது முதல் விக்கெட்டாக விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். தற்போது தனது நூறாவாது விக்கெட்டாகவும் விராட் கோலியை வீழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆஸி., எதிரான ஒருநாள், டி20 தொடரில் அஸ்வினை சேர்க்காதது ஏன்?