தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல்லிலிருந்து தோனி ஓய்வா? ட்விட்டர் கருத்துகளும் ரசிகர்களின் ரியாக்ஷனும்! - தோனி ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு

மும்பை அணிகெதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வியடைந்ததை அடுத்து, ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஓய்வு பெறவுள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Is MS Dhoni retiring from IPL? Twitter thinks so
Is MS Dhoni retiring from IPL? Twitter thinks so

By

Published : Oct 24, 2020, 5:48 PM IST

விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இதில் நேற்று (அக்.23) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியிடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் முதல் அணி என்ற பெயரை சிஸ்கே அணி பெற்றுள்ளது. இப்போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ஜெர்சியை மும்பை அணியின் பாண்டியா சகோதரர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

மேலும் இப்புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்தது. இதற்கு முன்னதாக தோனி ஐபிஎல் தொடரில் களமிறங்கிய 200ஆவது போட்டியின் ஜெர்சியை ஜோஸ் பட்லருக்கு பரிசளித்திருந்தார்.

இதன் மூலம் எம்.எஸ்.தோனி ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறவுள்ளார் என்ற செய்தி ட்விட்டரில் தீயாய் பரவத்தொடங்கியது. ஆனால் இது குறித்து சிஎஸ்கே நிர்வாகமோ, அல்லது தோனியின் தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை தோனி அதிர்ச்சிக்குள்ளாக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க:10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்திய மும்பை!

ABOUT THE AUTHOR

...view details