ஐபிஎல் தொடரில் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை (அக்.15) நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஆர்சிபி அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், அரபு மைதானங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில், "இதற்கு முன்னதாக நான் சார்ஜா மைதானத்தில் விளையாடும் போது, மைதானத்தில் சிறிது வறட்சியான சூழல் இருந்தது. ஆனால் அதுதவிர இந்த மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.