ஐபிஎல் தொடரில் இன்று (அக்.12) நடைபெறும் 28ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பலப்பரீட்சை நடத்துகிறது.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு என சமபலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.