2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளுக்கு வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான மினி ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அலுவலர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎல் ஏலம் எப்போது தெரியுமா? - பிசிசிஐ
டெல்லி: ஐபிஎல் போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 18ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். இருப்பினும், போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா அல்லது வெளிநாட்டில் நடத்தப்படுமா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை பிசிசிஐ இன்னும் வெளியிடவில்லை.
2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி, கரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அடுத்த மாதம், இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இந்தியாவில் சுமூகமாக நடைபெறும் பட்சத்தில் ஐபிஎல் போட்டி இங்கு நடப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.