2020 ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான முதல் குவாலிஃபயர் போட்டியில் டெல்லி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது. இதனால் இரண்டாவது குவாலிஃபயர் தொடரில் டெல்லி அணி ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளது. இதில் ஹைதராபாத் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டி குறித்து டெல்லி அணி வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் பேசுகையில், ''ஹைதராபாத் அணி இந்தத் தொடரில் பலமாக உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் வந்த பயணம் ஆச்சரியமாக இருந்தது. கடந்த போட்டியிலும் சிறப்பாக ஆடியுள்ளார்கள். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்திலும் நன்றாக செயல்படுகிறார்கள். ரஷீத் கானின் திறமை ஒவ்வொரு போட்டியிலும் ஆச்சரியமளிக்கிறார்.
எங்களுக்கு எதிரான போட்டியில் யார் திறமையை வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் வெற்றிபெறுவார்கள். எங்களால் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும் என நம்புகிறேன். அபுதாபி மைதானங்களில் இரவு நேரங்களில் எப்படி பிட்ச்சின் தன்மை மாறும் என்று கணிக்க முடியவில்லை. யார் பிட்ச்சின் தன்மைக்கு ஏற்ப ஆடுகிறார்கள் என்பது முக்கியம்'' என்றார்.
டெல்லி அணிக்காக கோப்பையை வெல்வதற்கு இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற வேண்டும். ஐபிஎல் மிக நீண்ட தொடராக உள்ளதால், வீரர்கள் அனைவரும் குடும்பம் போல் உணர்கிறோம். இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு நிச்சயம் கடும் போட்டியிருக்கும்'' என்றார்.
இதையும் படிங்க:பார்முலா ஒன் கார் பந்தயம்: ரசிகர்கள் வெளியே, சுகாதார ஊழியர்கள் உள்ளே!