தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

“இலக்கை அல்ல, ஆட்டத்தை முடிக்கவே நினைத்தேன்”- மார்தட்டும் ரஹானே!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், இலக்கை எட்டிப் பிடிக்க நினைக்கவில்லை, மாறாக அந்த ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க நினைத்தேன் என்று ரஹானே கூறியுள்ளார்.

IPL 2020 Ajinkya Rahane Delhi capitals Indian Premier League DC beat RCB Shikhar Dhawan ரஹானே ஷிகர் தவான் ஆட்டத்தை முடிக்க நினைத்தேன் ஐபிஎல்2020
IPL 2020 Ajinkya Rahane Delhi capitals Indian Premier League DC beat RCB Shikhar Dhawan ரஹானே ஷிகர் தவான் ஆட்டத்தை முடிக்க நினைத்தேன் ஐபிஎல்2020

By

Published : Nov 3, 2020, 10:20 PM IST

அபுதாபி:ஐபிஎல் 2020 இல் திங்கள்கிழமை (நவ.2) நடந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

153 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ், 19 ஓவரில் இலக்கை எட்டி பிடித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 41 பந்துகளில் 54 ரன்களும், ரஹானே 46 பந்துகளில் 60 ரன்களும் குவித்தனர்.

இதனால் பெங்களூருவுக்கு எதிரான இலக்கை எளிதில் எட்டிப் பிடித்த டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறி விட்டது. இந்நிலையில் ரஹானேவை அணியின் பயிற்சியாளர் மூன்றாவது விக்கெட்டுக்கு இறங்க அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வெற்றி குறித்து ரஹானே,

ரிக்கி என்னிடம் மூன்றாவது வீரராக களமிறங்க கூறினார். ஆனால் நான் பேட்டிங்கில் நல்ல பார்மில் இருந்தேன். மேலும் ஷிகர் தவானுடன் விளையாடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருந்தது. நாங்கள் இருவரும் களத்தில் ஒருவருக்கொருவர் ஐடியாக்களை பகிர்ந்துகொள்வோம். மேலும், எங்கள் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். பொதுவாக, நான் இலக்கை பற்றி சிந்திக்கவில்லை.

சரியான ஷாட்களை அடிக்க வேண்டும், அதன் மூலம் ரன் குவிப்பில் ஈடுபட வேண்டும் என்று நினைத்தேன். ஆட்டத்தை வெற்றியுடன் முடித்து காட்டுவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். கடந்த கால ஐபிஎல் போட்டிகள் குறித்தும் திரும்பி பார்த்தோம். வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது

என்று தெரிவித்துள்ளார். பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை பிடித்திருந்தால், அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு வாய்ப்பாக அமைந்திருக்கும்.

ஒருவேளை டெல்லி தோற்றிருந்தால் பெங்களூரு பிளே ஆஃப் சுற்றிற்கு தகுதி பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இளசுகளே மண்ட பத்திரம்'- சச்சின் டெண்டுல்கர்!

ABOUT THE AUTHOR

...view details