ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடு கிறது.
அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதனாத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கு கிறது. நடப்பு சீசனில் இரு அணிகளும் அதிக வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளதால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 6 போட்டிகளில் பங்கேற்று, ஐந்து வெற்றி ஒரு தோல்வி என புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்து வருகிறது.
ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ஹெட்மையர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்றைய போட்டியிலும் அவர்களது அதிரடி தொடரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
பந்துவீச்சு தரப்பில் வேகப்பந்துவீச்சில் காகிசோ ரபாடாவும், சுழற்பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வினும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், தொடக்க ஓவர்களிலேயே எதிரணியின் விக்கெட்டுகளை டெல்லி அணி வீழ்த்தி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மும்பை இந்தியன்ஸ்:
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்ற ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.