இந்த ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பும்ராவின் பந்துவீச்சை விமர்சனம் செய்து வந்தவர்கள் அனைவரும், இன்று பும்ராவை புகழ்ந்து வருகின்றனர். 13 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவரின் பந்துவீச்சில் விக்கெட் கொடுத்துவிடக் கூடாது என்ற ப்ரஷரில் மற்ற பந்துவீச்சாளர்களிடம் அடிக்க முற்பட்டு பேட்ஸ்மேன்கள் வெளியேறி வருகின்றனர்.
இதைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஷேன் பாண்ட் கூறுகையில், ''பும்ராவின் பந்துவீச்சை பார்ப்பதே அலாதியானது. டி20 வகைப் போட்டிகளில் இவர் தான் உலகிலேயே சிறந்தவர். இவருக்கு உறுதுணையாக செயல்படும் போல்ட் மிகச்சிறந்த வீரர். 2012ஆம் ஆண்டு முதல் போல்ட்டுடன் பணியாற்றி வருகிறேன். மும்பை அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றதுமே மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஏனென்றால் அவர் மிகவும் அச்சுறுத்தலான பந்துவீச்சாளர் என்று தெரியும்.