ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், பிளே ஆஃப் வாய்ப்பை தற்காத்துக் கொண்டுள்ளது. இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கர்ரன் அதிரடியாக விளைடாடி 31 ரன்களை குவித்தார்.அதேபோல் பந்துவீச்சிலுல் சிறப்பாக செயல்பட்டு வார்னரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இப்போட்டிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சாம் கர்ரன் சென்னை அணிக்கு கிடைத்த ஒரு முழுமையான கிரிக்கெட் வீரர் என்று தெரிவித்துள்ளார்.