தமிழ்நாடு

tamil nadu

ராகுல் vs தவான்; பும்ரா vs ரபாடா? ஆரஞ்சு கேப், பர்புள் கேப் யாருக்கு?

By

Published : Nov 9, 2020, 4:34 PM IST

அபுதாபி: ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பர்புள் கேப், ஆரஞ்சு கேப் ஆகியவற்றை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ipl-2020-purple-cap-now-with-rabada-orange-stays-with-kl
ipl-2020-purple-cap-now-with-rabada-orange-stays-with-kl

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த இரண்டாவது குவால்ஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியை டெல்லி அணி வீழ்த்தியது. இதன்மூலம் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக டெல்லி அணி முன்னேறியுள்ளது.

இதனால் நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் ஆடவுள்ளது. இது ஒருபக்கம் இருக்க, ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரர்களுக்கு வழங்கப்படும் பர்புள் கேப் மற்றும் அதிக ரன்கள் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு கேப் ஆகியவற்றை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்போது வரை அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் 670 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப்பை சவைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 603 ரன்கள் சேர்த்து இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் 68 ரன்கள் எடுத்தால் ஆரஞ்சு கேப்பை வெல்வார். இதனால் ஆரஞ்சு கேப்பை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல் நேற்றையப் போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா, பும்ராவிடம் இருந்த பர்புள் கேப்பை வென்றுள்ளார். 16 போட்டிகளில் ஆடி 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ரபாடாவின் எண்ணிக்கையை, இறுதிப்போட்டியில் பும்ரா தொட்டால் பர்புள் கேப்பை வெல்வார். பும்ரா இப்போது 14 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எங்களால் நிச்சயம் ஹைதராபாத் அணியை வீழ்த்த முடியும்: ஸ்டோய்னிஸ்

ABOUT THE AUTHOR

...view details