தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எங்கள் பேட்ஸ்மேன்களுக்குப் பொறுப்பில்லை: ஸ்டீவ் ஸ்மித் காட்டம் - ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பேட்ஸ்மேன்கள் வெற்றிபெறுவதற்கான பொறுப்பினை எடுத்துக் கொள்ளவில்லை என ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ipl-2020-our-batters-didnt-take-responsibility-says-smith
ipl-2020-our-batters-didnt-take-responsibility-says-smith

By

Published : Nov 2, 2020, 3:49 PM IST

கொல்கத்தா அணிக்கு எதிரான ராஜஸ்தான் அணி ஆடிய நேற்றைய போட்டியில், கொல்கத்தா அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றியைப் பெற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது.

மும்பை, கிங்ஸ் லெவன் அணிகளுக்கு எதிரான பெரிய ரன்களை சேஸ் செய்த அணியால், கொல்கத்தா அணிக்கு எதிராக மீண்டும் சேஸ் செய்ய முடியவில்லை. அதிலும் முக்கிய பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஸ்டோக்ஸ், ஸ்டீவ் ஸ்மித், சஞ்சு சாம்சன் ஆகியோர் எளிதாக தங்களது விக்கெட்டினை கொடுத்து வெளியேறினார். இதனால் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.

இந்தத் தோல்வி குறித்து ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், ''ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 180 ரன்களை சேஸ் செய்ய வேண்டியிருக்கும் என்பது தெரியும். பிட்சில் கொஞ்சம் ஈரம் இருந்தது. அதேபோல் பவர் ப்ளே ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு முக்கியக் காரணம். கம்மின்ஸ் மிகச்சிறந்த இடங்களில் பந்துகளை வீசினார்.

ஸ்டீவ் ஸ்மித்

இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் தொடக்கமும், முடிவும் சரியாக அமைந்தது. இடையில்தான் நாங்கள் சரியாக விளையாடவில்லை. எங்களது முதல் 4 நிலையில் ஆடும் பேட்ஸ்மேன்கள் பொறுப்பினை உணர்ந்து ஆடவில்லை.

இந்தத் தொடரில் ஆர்ச்சர், டிவாட்டியா மட்டுமே தொடர் முழுவதும் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு மற்ற வீரர்களின் உதவி கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்'' என்றார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்த நிலையில், ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. இந்தத் தொடரில் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் முடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரோஹித் அணியில் இடம்பெறாமல் இருப்பதே நல்லது’ - ரவி சாஸ்திரி!

ABOUT THE AUTHOR

...view details