தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ராயுடு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்' - தோனி!

துபாய்: அடுத்த போட்டியில் ராயுடு வந்துவிட்டால், வித்தியாசமான முயற்சியை அணியில் கொண்டு வர உதவியாக இருக்கும் என சிஎஸ்கே அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

honi
honi

By

Published : Sep 26, 2020, 3:20 PM IST

ஐ.பி.எல் 13ஆவது சீசனின் 7-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடள்ஸ் அணிகள் நேற்று மோதின.முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து,176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆனால், ஆரம்பமே சிஎஸ்கே அணி சிக்கலாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் வழக்கம் போல் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.பின்னர், களத்திற்கு வந்த டூ-பிளசிஸ் மட்டும் நிதானமாக ஆடி அணிக்கு ரன்களை சேர்த்து கொண்டிருந்தார். சி.எஸ்.கே கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த போட்டியில் 12 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இறுதியாக சி.எஸ்.கே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐபிஎல் போட்டியில் இரண்டாவது முறையும் சிஎஸ்கே அணி தொல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய அம்பத்தி ராயுடு இல்லாதது தான் தோல்விக்கு காரணம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கூறுகையில், இன்று பனி இல்லை, ஆனால் விக்கெட் மெதுவாகச் சென்றது. பேட்டிங் பிரிவைப் பொறுத்தமட்டில் உத்வேகம் இல்லை. தொடக்கத்தில் ரன்களை அடிக்க தவறிவிட்டால் ரன் ரேட் விகிதம் எகிறிக்கொண்டே சென்றால் மிடில் ஆர்டர் வரிசைக்குத்தான் நெருக்கடி ஏற்படும். அதை சரிசெய்திட வேண்டும். ஒரு வேளை ராயுடு அடுத்த போட்டிக்கு வந்துவிட்டால், வித்தியாசமான முயற்சியை செய்ய சுதந்திரம் கிடைக்கும். அணியில் கூடுதல் பந்து வீச்சாளரை சேர்த்து பரிசோதிக்க முடியும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "பவுலிங் பிரிவைப் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. சுழற்பந்து வீச்சாளர்கள் இன்னும் தொடருக்குள் புகவில்லை என்றே நினைக்கிறேன். பவுலர்களை மாற்றிவிட்டால் பிரச்சினை சரியாகி விடாது. நாங்கள் சிறப்பாக தான் பந்து வீசுகிறோம். ஆனால், அதே சமயம் எல்லை கோட்டிற்கும் அதிகப்படியான பந்துகள் செல்வது ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த போட்டிக்கு 7 நாள்கள் இடைவெளி உள்ளதால், அதற்குள் வீரர்களுக்கு நன்கு பயிற்சியளித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details