ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தொடக்கம் முதலே பரபரப்புடன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது.
இந்நிலையில் இத்தொடரில் இன்று(செப்.28) நடைபெறவுள்ள 10ஆவது லீக் ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர்,குர்கீரத் சிங் மான், இசுரு உதனா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், ஆடம் ஸாம்பா.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, ஜேம்ஸ் பாட்டின்சன் , ராகுல் சாஹர், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன்: இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய வாவ்ரிங்கா, ஸ்வெரவ்!