தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிளே ஆஃப்க்கு முட்டிமோதும் பஞ்சாப் - கொல்கத்தா! - கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி தகவல்கள்

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.26) நடைபெறும் 46ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: KXIP, KKR face each other, crucial match for top 4 spot
IPL 2020: KXIP, KKR face each other, crucial match for top 4 spot

By

Published : Oct 26, 2020, 4:02 PM IST

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. தொடர் மீதான எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

அந்த வகையில் இன்று (அக்.26) நடைபெறும் 46ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.

சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும் என்பதால் இரு அணியினரும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

ஹைதராபாத் அணிகெதிரான கடந்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றிபெற்று அசத்தியது. அப்போட்டியில் அணியின் பேட்டிங் சொதப்பினாலும், சாமர்த்தியமான பந்துவீச்சினால் பஞ்சாப் அணி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

கே.எல்.ராகுல், கெய்ல், மேக்ஸ்வெல், பூரான் என நட்சத்திர வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் ஓய்விலிருந்த மயங்க் அகர்வால், இன்றைய போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழத்தொடங்கியுள்ளது.

காரணம் இந்த சீசனில் மயங்க் அகர்வால், 10 போட்டிகளில் 398 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தார். இந்நிலையில், அவர் அணியில் இடம்பெறாமல் இருப்பது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கிளென் மேக்ஸ்வெல்

பந்துவீச்சாளர்கள் தரப்பில் ஜோர்டன், ஷமி, முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங் என அனைவரும் தங்களது திறனை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர். இதனால் இன்றைய போட்டியிலும் இவர்களின் பங்களிப்பு, நரைன், ராணா, மோர்கன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்திலிருந்து பஞ்சாப் அணி தப்பிக்க உதவியாக அமையும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

மோர்கன் தலைமையிலான கேகேஆர் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 12 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது. இனிவரும் போட்டிகளில் ஏதேனும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் கேகேஆர் அணியின் பிளே ஆஃப் கனவு நனவாகும் என்பதில் சந்தேகமில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

திரிபாதி, ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தொடர்ச்சியாக தங்களது பணியைத் திறம்பட செய்து வருகின்றனர். இருப்பினும் அதிரடி வீரர் சுப்மன் கில் தொடர்ச்சியாக சொதப்பி வருவது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

அதேசமயம் நட்சத்திர வீரர் சுனில் நரைன், டெல்லி அணிகெதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதமடித்துள்ளார். நரைன் தனது பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளது கேகேஆர் அணிக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சுனில் நரைன்

பந்துவீச்சு தரப்பில் ஃபர்குசன், கம்மின்ஸ் ஆகியோர் தொடர்ந்து தங்களது வேகத்தைக் காட்டி வருவதால், இன்றைய போட்டியிலும் அது எதிரொலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அதேசமயம் டெல்லி அணிகெதிரான போட்டியில் தனது அபார பந்துவீச்சினால் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய வருண் சக்ரவர்த்தி மீதான எதிர்பார்ப்பு, இன்றைய ஆட்டத்தில் பண்மடங்கு அதிகரித்துள்ளது.

வருண் சக்ரவர்த்தி

மேலும் நடப்பு சீசனில் இரு அணிகளும் முதலில் மோதிய லீக் ஆட்டத்தில் கேகேஆர் அணி நூலிழையில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இதனால் முந்தைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்க்கும் முயற்சியில் பஞ்சாப் அணி இன்றைய ஆட்டத்தில் வீறு கொண்டு ஆடும் என்பதில் சந்தேகமில்லை.

உத்தேச அணி:

கொல்கத்தா: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன், நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக், நரைன், கம்மின்ஸ், வருண் சக்கரவர்த்தி, நாகர்கொட்டி, ஃபர்குசன், சிவம் மாவி.

பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், மந்தீப் சிங், நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், கிறிஸ் ஜோர்டன், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க:'அவர்கள் எப்போதும் நம் இதயத்தில் சூப்பர் கிங்ஸாக இருப்பார்கள்' - சாக்ஷி தோனி உணர்ச்சிகர பதிவு!

ABOUT THE AUTHOR

...view details