தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: நேருக்கு நேர்...! கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆறாவது லீக் ஆட்டத்தில் கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: KXIP keen to win first points versus RCB
IPL 2020: KXIP keen to win first points versus RCB

By

Published : Sep 24, 2020, 4:40 PM IST

Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இன்று (செப். 24) நடைபெறவுள்ள ஆறாவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

கெய்ல், விராட் கோலி, டி வில்லியர்ஸ், கே.எல். ராகுல், மேக்ஸ்வெல், ஆரோன் ஃபிஞ்ச் என அதிரடி பேட்ஸ்மேன்கள் இன்றையப் போட்டியில் களம் காணவுள்ளதால், இந்த ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பன்மடங்காக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

இந்தச் சீசனின் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதிய பஞ்சாப் அணி, சூப்பர் ஓவர் வரை சென்று தோல்வியைத் தழுவியது. இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

மயங்க் அகர்வால்

மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், ராகுல், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்டிங்கிலும், முகமது சமி, கிறிஸ் ஜார்டன், முஜிப் உர் ரஹ்மான் ஆகியோர் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் இன்றையப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எளிதாக வெற்றியை ஈட்டும்.

கிறிஸ் கெய்ல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

இந்த சீசனின் முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவுசெய்யும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் களம் காணவுள்ளது.

தேவ்தத் படிகல்

அதிலும் தனது அறிமுக போட்டியிலேயே அரைசதமடித்து அசத்திய தேவ்தத் படிகல் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஃபிஞ்ச் என பேட்டிங்கில் வலிமையாகவுள்ள பெங்களூரு அணி, பந்துவீச்சில் சஹால், சைனி ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது.

ஏபிடி வில்லியர்ஸ்

அதனால் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் மோரிஸ் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதல் போட்டியை வென்ற ஆர்சிபி அணி அதனைத் தக்கவைத்துக்கொள்ளுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்:

பஞ்சாப், பெங்களூரு அணிகள் ஐபிஎல் தொடரில் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 12முறை வெற்றியைப் பதிவுசெய்து, சமமான வெற்றி விகிதாசாரத்தை வைத்துள்ளன. இதனால் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு நிச்சயமாக விருந்து படைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மைதானம்:

இன்றைய போட்டி நடைபெறவுள்ள துபாய் மைதானமானது பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானமாகும். இதனால் இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் புற்கள் நிறைந்த மைதானம் என்பதால் இன்னிங்ஸின் தொடக்கங்களில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உத்தேச அணி:

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:கே.எல். ராகுல் (கேப்டன்), கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், கிளென் மேக்ஸ்வெல், கருண் நாயர், கிருஷ்ணப்பா கவுதம், முகமது ஷமி, ஷெல்டன் கோட்ரெல், முருகன் அஸ்வின், முஜீப் உர் ரஹ்மான், ரவி பிஷ்னோய்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், ஜோஷ் பிலீப், டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால், உமேஷ் யாதவ்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: கேகேஆர் vs மும்பை இந்தியன்ஸ்..! ஆட்டத்தை மாற்றிய தருணங்கள்

Last Updated : Sep 25, 2020, 5:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details