தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடும் ஹைதராபாத் - பஞ்சாப் - பஞ்சாப் vs ஹைதராபாத்போட்டி கணிப்பு

துபாய்: பஞ்சாப் - ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று (அக்டோபர் 23) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

IPL 2020: KXIP eye another clinicalIPL 2020: KXIP eye another clinical show against SRH show against SRH
IPL 2020: KXIP eye another clinical show against SRH

By

Published : Oct 24, 2020, 4:49 PM IST

Updated : Oct 24, 2020, 4:57 PM IST

ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது. தொடர் மீதான எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இன்று நடைபெறும் 43ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதவுள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இரு அணிகளும் பிளே ஆஃப் வாய்ப்புக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நடப்பு சீசனில் பங்கேற்ற 10 போட்டிகளில் நான்கு வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

வார்னர், பேர்ஸ்டோவ், விஜய் சங்கர், மனீஷ் பாண்டே என அதிரடி வீரர்களுடன் நடராஜன், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான் போன்ற சிறப்பான பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளது. இவர்கள் இன்றைய போட்டியில் தங்களது திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில் ஹைதராபாத் அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விஜய் சங்கர் - மனீஷ் பாண்டே

மேலும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் ஹைதராபாத் அணி உள்ளதால், இப்போட்டியில் வெற்றி ஈட்டும் முனைப்போடு செயல்படுவார்கள் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்:

கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கடந்த சில போட்டிகளாக வெளிப்படுத்தி வரும் அபார ஆட்டத்தினால் நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

மேலும் ராகுல், மயங்க், மேக்ஸ்வெல், கெய்ல், பூரான் என அணியின் அதிரடி வீரர்கள் தங்களது முழுத்திறனையும் வெளிப்படுத்தி வருவதால், பஞ்சாப் அணி மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.

பந்துவீச்சுத் தரப்பில் முகமது ஷமி, ஜேம்ஸ் நீஷம், அர்ஷ்தீப் சிங், ரவி பிஸ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோர், இன்றைய போட்டியிலும் பஞ்சாப் அணிக்கு தங்களது பங்களிப்பை தருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கிறிஸ் கெய்ல் - கே.எல்.ராகுல்

அதேசமயம் இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டியது அவசியம் என்பதால், இப்போட்டியில் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது.

உத்தேச அணி:

ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சம்த், ரஷித் கான், நடராஜன், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா.

பஞ்சாப்: கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல் (கேப்டன்), மயங்க் அகர்வால், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரான், மேக்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க: 'நீண்ட காலம் காத்திருந்தேன்' - மனம் திறந்த ஜேசன் ஹோல்டர்

Last Updated : Oct 24, 2020, 4:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details