தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆர்சிபி ரசிகர்களுக்கு எமோசனல் குறிப்பை எழுதிய கேப்டன் கோலி! - கேப்டன் விராட் கோலி

அபுதாபி: ஹைதராபாத் அணிக்கு எதிராக நடந்த ப்ளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்த பின், பெங்களூரு அணியின் ரசிகர்களுக்கு கேப்டன் விராட் கோலி உணர்வுப்பூர்வமாக மெசேஜ் ஒன்றை எழுதியுள்ளார்.

ipl-2020-kohli-pens-emotional-note-for-fans-after-rcbs-exit
ipl-2020-kohli-pens-emotional-note-for-fans-after-rcbs-exit

By

Published : Nov 7, 2020, 3:37 PM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இந்தத் தோல்வியின் மூலம் ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பைக் கனவு முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டிக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ரசிகர்களுக்காக உணர்வுப்பூர்மான மெசேஜ் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''வெற்றி, தோல்வி இரண்டிலும் அனைவரும் ஒன்றாக இருந்தோம். ஒரு குழுவாக மிகச்சிறந்த பயணமாக அமைந்தது. ஆம், இந்த ஆண்டு நமக்கானதாக இல்லை, ஆனால் நம் அணியை நினைத்துப் பெருமையாக உள்ளது.

ரசிகர்கள் அளித்த அளவுகடந்த ஆதரவுக்கு நன்றி. உங்களின் அன்புதான் எங்களை இன்னும் வலிமைப்படுத்துகிறது. விரைவில் அடுத்த ஆண்டு சந்திப்போம்'' எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தத் தோல்வி குறித்து பெங்களூரு அணியின் பயிற்சியாளர் சைமன் கேடிச் கூறுகையில், ''ஐபிஎல் தொடரின் முதல் 10 ஆட்டங்களின்போது நாங்கள் மிகவும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் கடைசி நான்கு ஆட்டத்தில் எங்களின் ஆட்டம் எடுபடவில்லை. அதிலும் பேட்டிங் சுத்தமாக சரியில்லை.

இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் நிச்சயம் சன்ரைசர்ஸ் அணியை பாராட்ட வேண்டும். எங்களைத் தொடர்ந்து ப்ரஷர் செய்தார்கள். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்தியது அவர்களுக்கு பெரும் சாதகமானது'' என்றார்.

இதையும் படிங்க:வில்லியம்சனின் கேட்சை பிடித்திருந்தால் நாங்க ஜெயித்திருக்கலாம் - தோல்வி குறித்து கோலி

ABOUT THE AUTHOR

...view details