ஐபிஎல் தொடரில் இன்று (அக்.10) 24ஆவது லீக் ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கே.எல். ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது.
இதில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணியில் தொடக்க வீரர்கள் ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, இயன் மோர்கன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தினார். பின்னர் அவருடன் கைக்கோர்த்த அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.