ரசிகர்ளின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமின்றி ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் வீறுநடை போட்டுவருகிறது. இத்தொடரில் இன்று (செப்.30) நடைபெறவுள்ள 12ஆவது லீக் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
ஆர்ஆர்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டாம் கர்ரன், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திவேத்தியா, அங்கித் ராஜ்புட்.
கேகேஆர்: தினேஷ் கார்த்திக் (கே), சுனில் நரைன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், கம்ளேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஷிவம் மாவி.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: மீண்டும் ஊதா நிற தொப்பியை கைப்பற்றிய ரபாடா!