2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதவுள்ளது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றிபெற வேண்டும் என்றால், கடந்தப் போட்டியில் டெல்லி அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்டோய்னிஸ் நன்றாக ஆட வேண்டும்.
ஆனால் இன்றையப் போட்டியில் டெல்லி அணி மார்க்ஸ் ஸ்டோய்னிஸை தொடக்க வீரராக களமிறக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மும்பை அணியின் போல்ட், பும்ரா ஆகியோர் மிகச்சிறப்பாக வீசுவதால், மிடில் ஓவர்களில் ஸ்டோய்னிஸ் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.