தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கப் மேல ஆசை இருந்தா, இவங்க 5 பேரும் ஆடியே ஆகணும்! - ரபாடா

முதல்முறையாக டெல்லி அணி ஐபிஎல் கோப்பையை வெற்றிபெற வேண்டும் என்றால் அந்த அணியின் இந்த ஐந்து வீரர்கள் கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டும்.

ipl-2020-final-mi-vs-dc-5-dc-players-to-watch-out-for
ipl-2020-final-mi-vs-dc-5-dc-players-to-watch-out-for

By

Published : Nov 10, 2020, 4:48 PM IST

13 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தொடரைப் பொறுத்தவரைக்கும் டெல்லி அணிக்கு ஆட்டம் பிடித்துவிட்டால், மொத்தமாக வெற்றிபெற்றுவிடும். ஆட்டம் கைகளுக்கு பிடிபடவில்லை என்றால் அபார தோல்வியை அடையும். இதனால் டெல்லி அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முதல்முறையாக டெல்லி அணி ஐபிஎல் கோப்பையை வெற்றிபெற வேண்டும் என்றால் டெல்லி அணியின் இந்த ஐந்து வீரர்கள் கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டும்.

ரபாடா:

தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திரப் பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் அருமையாக அமைந்துள்ளது. 16 போட்டிகளில் ஆடியுள்ள ரபாடா, 29 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்புள் கேப்பை கைப்பற்றியுள்ளார். டெல்லி அணி இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியதற்கு ரபாடா தான் முதன்மையான காரணம். இறுதிப்போட்டியில் ரபாடா சிறப்பாக செயல்பட்டால், 2020ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையில் டெல்லி பெயரை எழுதிவிடலாம்.

ரபாடா

ஷிகர் தவான்:

இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான். சில காலமாக இவரது ஃபார்மின்மை பிரச்னை காரணமாக இந்திய அணியிலிருந்து நீக்கப்படும் நிலைக்கு சென்றார். ஆனால் இந்த ஐபிஎல் தொடர் அனைத்தையும் மாற்றியுள்ளது. இவரை மாற்றிக்காட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரு சதங்கள் அடித்து சாதனைப் படைத்ததோடு, 603 ரன்களை குவித்துள்ளார். பும்ரா, போல்ட் இருவரையும் இவரால் மட்டுமே தடுக்க முடியும் என்பதால், தவானின் ஆட்டம் டெல்லி அணிக்கு மிகவும் முக்கியம்.

தவான்

மார்கஸ் ஸ்டோய்னிஸ்:

பிக் பாஷ் தொடரில் தொடர் நாயகன் விருது வாங்கிவிட்டு, ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். திடீரென கடைசி நேரத்தில் 50 ரன்கள் எடுத்து டெல்லி அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுப்பதாகட்டும், பேட்டிங்கில் இல்லையென்றால் பந்துவீச்சில் விக்கெட்டுகள் வீழ்த்துவதாகட்டும், இந்த ஐபிஎல் தொடரில் ஸ்டோய்னிஸின் கிராஃப் எங்கேயோ எகிறியுள்ளது.

ஸ்டோய்னிஸ்

அதேபோல் தொடக்க வீரராக இன்று களமிறங்கி இவர் விக்கெட் வீழ்த்தப்படவில்லை என்றால், நிச்சயம் டெல்லி அணியின் ஸ்கோர் 200 ரன்களை தொட்டுவிடும்.

ஸ்ரேயாஸ் ஐயர்:

ஷிகர் தவானுக்கு பின் டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த சீசனில் 16 போட்டிகளில் ஆடி 454 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஸ்ரேயாஸ் பேட்டை சுழற்றினால் மட்டுமே டெல்லி அணிக்கு வெற்றி. அதிலும் ராகுல் சாஹர், குர்ணால் பாண்டியா ஆகியோருக்கு எதிரான இவரது பவர் ஹிட்டிங் ஸ்டைல் எடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஆன்ரிக் நார்கியே:

தென் ஆப்பிரிக்காவின் மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிக் நார்கியே. கிறிஸ் வோக்ஸிற்கு பதில் வீரராக வந்த நார்கியே, இந்த ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு. 15 போட்டிகளில் ஆடியுள்ள இவர், 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ரபாடா எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட வேண்டுமோ, அதே அளவிற்கு இவரும் செயல்பட்டால், டெல்லி அணிக்கு நிச்சயம் கோப்பையை வெல்லும்.

நார்கியே

இதையும் படிங்க:ஐந்து வீரர்கள் சிறப்பாக ஆடிவிட்டால், மும்பைக்கு 5ஆவது கோப்பை உறுதி!

ABOUT THE AUTHOR

...view details