தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஹைதராபாத்துடன் மல்லுக்கட்டும் டெல்லி - வெல்வது யார்? - SRH vs DC match updates

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.27) நடைபெறும் 47ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

IPL 2020: Delhi aim to bounce back, settle scores with SRH
IPL 2020: Delhi aim to bounce back, settle scores with SRH

By

Published : Oct 27, 2020, 3:27 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், இன்று நடைபெறும் 47ஆவது லீக் ஆட்டத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி முனைப்பில் களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஸ்டோய்னிஸ் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி வருவதால், அது டெல்லி அணிக்கு கூடுதல் பலத்தை அளித்துள்ளது. அதேபோல் பந்துவீச்சில் அஸ்வின், ரபாடா, நோர்ட்ஜ் ஆகியோர் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

ரிஷப் பந்த்

அதுமட்டுமில்லாமல் நடப்பு ஐபிஎல் சீசனில் டெல்லி அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் முனைப்போடு டெல்லி அணி களமிறங்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஹைதராபாத் அணியை பொறுத்தவரையில் பிளே ஆஃப் வாய்ப்புக்காக போராடி வருகிறது. அதன்படி இனி வரும் லீக் போட்டிகளில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் சிக்கியுள்ளது.

மனீஷ் பாண்டே - விஜய் சங்கர்

பேர்ஸ்டோவ், வார்னர், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர் போன்ற நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் மனீஷ் - விஜய் இணை கடந்த இரண்டு போட்டிகளாக பேட்டிங்கில் அசத்தினர்.

மேலும், ஜேசன் ஹோல்டர் அணியில் இடம்பெற்றிருப்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. புவனேஷ்வர் குமார் இடத்தை நடராஜன் நிரப்புவதால் பந்துவீச்சில் எப்போதும் போல ஹைதராபாத் அணி பலம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

எதுவாயினும் பிளே ஆஃப் வாய்ப்புக்காக ஹைதராபாத் அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான ஆர்வமும், எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உத்தேச அணி:

ஹைதராபாத்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், மனீஷ் பாண்டே, விஜய் சங்கர், பிரியாம் கார்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சம்த், ரஷித் கான், நடராஜன், சபாஷ் நதீம், சந்தீப் சர்மா.

டெல்லி: ஷிகர் தவான், ரஹானே/ பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மையர், ரிஷப் பந்த், மார்கஸ் ஸ்டோனிஸ், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், நோர்ட்ஜே, துஷார் தேஷ்பாண்டே, ககிசோ ரபாடா.

இதையும் படிங்க:ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: ரோஹித் சர்மா நீக்கம் குறித்து வெளிப்படைதன்மை வேண்டும்- கவாஸ்கர்

ABOUT THE AUTHOR

...view details