ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறவுள்ள 14ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
சிஎஸ்கே:ஷேன் வாட்சன், பாப் டூ பிளசிஸ், அம்பத்தி ராயுடு , மகேந்திர சிங் தோனி (கேப்டன்), டுவைன் பிராவோ, கேதர் ஜாதவ், சாம் கர்ரன், ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பியூஷ் சாவ்லா, ஷர்துல் தாக்கூர்.
எஸ்ஆர்எச்: டேவிட் வார்னர் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனீஷ் பாண்டே, பிரியாம் கார்க், அப்துல் சமத், அபிஷேக் சர்மா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், நடராஜன், கலீல் அஹ்மத்.
இதையும் படிங்க:ஃபெடரரின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்!