ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தற்போது இறுதிகாட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 49ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றால் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றுகான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.