தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

எலிமினேட்டரில் வெளியே செல்லப்போவது யார்? ஹைதராபாத் vs பெங்களூரு - hyderabad vs bangalore

அபுதாபு : ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி ஆடவுள்ளது.

ipl-2020-confident-srh-look-to-continue-winning-streak-against-shaky-rcb
ipl-2020-confident-srh-look-to-continue-winning-streak-against-shaky-rcb

By

Published : Nov 6, 2020, 5:39 PM IST

Updated : Nov 6, 2020, 6:39 PM IST

ப்ளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத்-பெங்களூரு அணிகள் ஆடவுள்ளன. இதற்கு முன்னதாக இந்த இரு அணிகள் ஆடிய லீக் போட்டியில் ஒன்றில் பெங்களூருவும், ஒன்றில் ஹைதராபாத்தும் வெற்றிபெற்றன.

ஆனால் பெங்களூரு அணி ஆடிய கடைசி நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்துள்ளதால், தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குள் புகுந்த ஹைதராபாத் அணியே வெற்றிபெறும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு அணி வெற்றிபெற வேண்டுமென்றால் ஹைதராபாத் அணியின் வார்னர் - சஹா இணையைக் கட்டுப்படுத்துவதோடு, ரஷீத் கான் ஓவரில் ரன்கள் சேர்த்து நெருக்கடி கொடுக்க வேண்டும். பெங்களூரு அணிக்கு படிக்கல் நல்ல தொடக்கம் கொடுத்தாலும், ”என் வேளை 50 ரன்கள் அடிப்பதுதான்” என்பதுபோல் அரைசதம் அடித்ததும் விக்கெட்டைக் கொடுத்துவிட்டு வெளியேறுகிறார்.

அதேபோல் ஆர்சிபிக்கு காலம் காலமாக இருந்து வரும் மிடில் ஆர்டர் பிரச்னை. இந்தத் தொடரில் விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை எடுத்துவிட்டால், சத்தியம் செய்து சொல்லலாம் வெற்றி ஹைதராபாத் அணிக்குதான் என்று! ஏனென்றால் டி வில்லியர்ஸிக்குப் பிறகு களமிறங்கும் தூபே, சுந்தர் ஆகியோர் 15 ரன்களுக்கு மேல் அடிக்கத் திணறி வருகின்றனர்.

மும்பை அணிக்கு பும்ரா எவ்வாறு பவர் ப்ளே ஓவர்களில் பந்துவீசி விக்கெட்டுகள் வீழ்த்துகிறாரோ, அதே அளவில் பந்துவீசி ஹைதராபாத் அணிக்கு சந்தீப் ஷர்மா விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். பேர்ஸ்டோவை பெஞ்சில் வைத்துவிட்டு சஹாவுடன் வந்த வார்னர் மீண்டும் தனது பழைய ஆட்டத்தை ஆடத் தொடங்கியுள்ளார்.

இவரைக் கட்டுப்படுத்த ஆர்சிபி அணியில் சாஹலை விட்டால் வேறு எந்த பந்துவீச்சாளரும் இல்லை. எனவே பவர் ப்ளே ஓவர்கள் முடிந்தவுடன் வரும் சாஹல், வார்னரைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஆர்சிபி அணிக்கு பிரச்னைதான்.

தொடரின் இறுதியில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹைதராபாத் அணி, வார்னர், சஹா, வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ப்ரியன் கார்க், ஹோல்டர் என சிறந்த பேட்டிங் வரிசையைக் கண்டறிந்துள்ளது. இதனால் வார்னரை தூக்கிவிட்டால் ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பைக் குறைக்கலாம்.

இவையனைத்தையும் கடந்து ஆர்சிபி அணிக்காக விராட் கோலி, டி வில்லியர்ஸ் இணை நிச்சயம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே ஆர்சிபி வெற்றிபெறும். அதனால் இவர்களின் ஆட்டமே, இன்றையப் போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் என்பதால் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறும் என்பதால் ஆட்டம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வைரல்: பெங்களூரு அணி வீரர்களின் கிராஃபிக் ஓவியம்!

Last Updated : Nov 6, 2020, 6:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details