ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (அக்.09) நடைபெறும் 23ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. பட்லர், சாம்சன், ஸ்மித், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் என அதிரடியான வீரர்கள் இன்றைய போட்டியில் விளையாடவுள்ளதால் மைதானத்தில் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி அதில் முதல் இரண்டு போட்டிகளை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. பட்லர், ஸ்மித், சாம்சன் என அதிரடி வீரர்கள் இருந்தாலும், அந்த அணி தொடக்க ஓவர்களிலேயே விக்கெட்களை இழந்து தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது.
மேலும் இன்றைய போட்டி நடைபெறவுள்ள சார்ஜா மைதானத்தில், ராஜஸ்தான் அணி பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், இன்றும் அதன் வெற்றிப் பயணம் தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
அதேசமயம் பந்துவீச்சு தரப்பில் ஆர்ச்சர், கர்ரன், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரைத் தவிர மீதமுள்ள பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவதால் இன்றைய போட்டியின்போது ராஜஸ்தான் அணியில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த சீசன் புள்ளிப்பட்டியலிலும் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது.