தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: தொடரிலிருந்து விலகினார் புவனேஷ்வர் குமார்; மாற்று வீரர் அறிவிப்பு! - பிரித்வி ராஹ் யர்ரா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு மாற்று வீரராக இளம் வேகப்பந்துவீச்சாளர் பிரித்வி ராஜ் யர்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.

IPL 2020: Bhuvneshwar Kumar's replacement named
IPL 2020: Bhuvneshwar Kumar's replacement named

By

Published : Oct 6, 2020, 4:28 PM IST

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குப் பஞ்சமின்றி ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.

இப்போட்டியின்போது ஹைதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், காயம் காரணமாக ஆட்டத்தின் பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புவனேஷ்வர் குமார், இந்தாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து முற்றிலும் விலகுவதாக அறிவித்தார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஆந்திராவைச் சேர்ந்த இடக்கை வேகப்பந்துவீச்சாளர் பிரித்வி ராஜ் யர்ரா (22) செயல்படுவார் என்ற தகவலும் வெளியானது.

தோனியுடன் பிரித்வி ராஜ்

இதனை உறுதிப்படுத்து வகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவினை வெளியிட்டுள்ளது. அப்பதிவில், “ஐபிஎல் 2020 தொடரிலிருந்து புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக விலகியுள்ளார். காயத்திலிருந்து அவர் சீக்கிரம் குணமடைய எங்களுடைய வாழ்த்துகள். தற்போது அவருக்கு மாற்று வீரராக பிரித்வி ராஜ் யர்ரா இந்த சீசன் முழுவதும் செயல்படுவார்” என்று தெரிவித்துள்ளது.

பிரித்வி ராஜ் யர்ரா 11 முதல் தர போட்டிகளில் 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details