தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: யுஏஇ வந்தடைந்த பென் ஸ்டோக்ஸ்! - ஐபிஎல் 13 சீசன்

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசனில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்தடைந்தார்.

IPL 2020: Ben Stokes arrives in UAE
IPL 2020: Ben Stokes arrives in UAE

By

Published : Oct 4, 2020, 3:47 PM IST

ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் நடைபெற்றுள்ள லீக் போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில் தனிபட்ட காரணங்களினால் ஐபிஎல் தொடரில் பங்கேற்காமலிருந்த பென் ஸ்டோக்ஸ், தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை உறுதிபடுத்தும் வகையில் ஸ்டோக்ஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'தூபாய் மிகவும் வெப்பமாக உள்ளது' என பதிவிட்டு, தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.

ஸ்டோக்ஸின் சமூக வலைதளப்பதிவு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் ஸ்டோக்ஸ், தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்த பிறகு, தனது அணி வீரர்களுடன் இணைவார் என்று ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் வெற்றியையும், மூன்று போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. தற்போது ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதால், ராஜஸ்தான் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!

ABOUT THE AUTHOR

...view details