13ஆவது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாளை மாலை தொடங்கவுள்ளது. இத்தனை சீசன்களாக நடந்த அனைத்தும் சூழல்களும் மாறி, இம்முறை முற்றிலும் புதிய சூழலில் ஐபிஎல் நடக்கவுள்ளது. முதல் போட்டிகள் நடப்பு சாம்பியனான மும்பை அணியை எதிர்த்து சென்னை அணி களமிறங்கியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை போல் இரு அணிகளுக்குள்ளும் எப்போதும் ஒரு போட்டி மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். இந்த அணிகளின் ஆட்டத்தின் போது ரசிகர்களின் கரகோஷங்கள் விண்ணைப் பிளக்கும்.
ஆனால் இம்முறை ரசிகர்கள், வீரர்கள், வர்ணனையாளர்கள் என அனைவருக்கும் மறக்க முடியாத தொடராக அமையவுள்ளது. அப்படி இந்தத் தொடரில் என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
1. இந்தியாவுக்கு வெளியில் ஐபிஎல்
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து தீவிரம் அடைந்து வருவதால், வருடாவருடம் பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. அங்கு உள்ள அபுதாபி, ஷார்ஜா, துபாய் ஆகிய மைதானங்களில் அனைத்து போட்டிகளும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. ரசிகர்கள் இல்லாத மைதானங்கள்:
கால தாமதமாக தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் இந்த முறை ரசிகர்களும் மைதானத்தில் பார்க்க முடியாது. ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ரசிகர்களின்றி காலி மைதானங்களில் நடக்கும் முதல் ஐபிஎல் இதுவே.
3. நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்:
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரும் இரவு 8 மணிக்கு தொடங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. அதே மாலை நேர போட்டிகள் 4 மணிக்கு தொடங்கிய நிலையில், 3.30 மணிக்கு இனி போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தனிமைப்படுத்தப்பட்ட அணிகள்:
ஐக்கிய அரபு அமீரகத்தில் வந்திறங்கியது முதல் 8 ஐபிஎல் அணிகளில் உள்ள அனைத்து வீரர்களும் பாதுகாப்பான சூழலில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். அமீரகம் புறப்படுவதற்கு முன்னதாக அனைத்து வீரர்களுக்கும் பலமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அமீரகம் வந்த பின், அனைத்து வீரர்களுக்கும் கண்டிப்புடன் 6 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பிறகு அவர்கள் அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனைகள் முதல் நாள், மூன்றாம் நாள், ஆறாம் நாள் ஆகிய நாள்களில் நடத்தப்பட்டது.
கரோனா பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்த பின்னரே ஒவ்வொரு அணி வீரர்களும் கிரிக்கெட் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
5. சமூக இடைவெளி: