ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர், விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வருகிறது. இதில் நேற்று (அக்.06) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை - ராஜஸ்தான் அணிகள் மோதின.
இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. இதில் மும்பை அணி சார்பில் ஜாஸ்பிரித் பும்ரா நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில், ‘கிரிக்கெட்டின் கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பும்ராவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சச்சினின் ட்விட்டர் பதிவில், “மும்பை இந்தியன்ஸ் அணி இன்றைய போட்டியில் பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டது. அதிலும் எதிரணியின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவியது. மேலும் இன்றைய ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் தனது ஃபார்மிற்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்றைய போட்டியில் அவரது பந்துவீச்சி என்னை மிகவும் கவர்ந்தது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!