ஐபிஎல் தொடரில் இன்று முதல் இரண்டாம் பாதி ஆட்டங்கள் தொடங்கவுள்ளன. புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கப்போகும் அணி எது என்பதை உறுதிப்படுத்தும் சுற்று என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் இன்று நடைபெறம் 29ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ஏற்கென தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் சென்னை அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருகின்றனர்.