ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 29ஆவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. வழக்கத்திற்கு மாறாக சாம் கர்ரன் - பாப் டூ பிளேசிஸ் இணை இன்றைய போட்டியிக் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்.
இருப்பினும் இதில் டூ பிளேசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் கர்ரனும் 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.