ஐபிஎல் தொடர் 13ஆவது சீசனில் இன்று (அக்.12) நடைபெற்ற 31ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 48 ரன்களை எடுத்திருந்தார்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் - கேஎல் ராகுல் இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.