தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்!

கொல்கத்தா - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

IPl 13 - RCB vs KKR toss
IPl 13 - RCB vs KKR toss

By

Published : Oct 21, 2020, 7:02 PM IST

Updated : Oct 21, 2020, 7:11 PM IST

ஐபிஎல் தொடரில் இன்று (அக்.21) நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பலப்பரீட்சை நடத்துகிறது.

அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

நடப்பு ஐபிஎல் சீசனில் இரு அணிகளும் பேட்டிங், பந்துவீச்சு என சமபலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கேகேஆர்: ராகுல் திரிபாதி, டாம் பான்டன், சுப்மன் கில், நிதீஷ் ராணா, இயன் மோர்கன்(கேப்டன்), தினேஷ் கார்த்திக், பாட் கம்மின்ஸ்,வருண் சக்ரவர்த்தி, ஷிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா, ஃபர்குசன்.

ஆர்சிபி: ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி(கேப்டன்), ஏபிடி வில்லியர்ஸ், தேவ்தத் படிகல், கிறிஸ் மோரிஷ், ஷிவம் தூபே, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், இசுரு உதனா, நவ்தீப் சைனி, யுஸ்வேந்திர சஹால்.

இதையும் படிங்க: லங்கா பிரீமியர் லீக் தொடர்: 'கண்டி டஸ்கர்ஸ்' அணியின் உரிமைத்தை வாங்கிய சல்மான் கானின் சகோதரர்

Last Updated : Oct 21, 2020, 7:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details