ஐபிஎல் தொடரில் இன்று (அக்.14) நடைபெறும் 30ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் மோதிய ஐபில் போட்டியில் டெல்லி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.