தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஐபிஎல் 2020: டூ பிளேசிஸுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா! - காகிசோ ரபாடா

இந்த சீசன் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை சென்னை அணியின் டூ பிளேசிஸும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை டெல்லி அணியின் ரபாடாவும் கைப்பற்றினர்.

IPL 13: CSK's du Plessis holds Orange Cap, Rabada gets Purple Cap
IPL 13: CSK's du Plessis holds Orange Cap, Rabada gets Purple Cap

By

Published : Sep 26, 2020, 6:17 PM IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏழாவது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

டூ பிளேசிஸுக்கு ஆரஞ்சு; ரபாடாவுக்கு ஊதா

இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. மேலும் இந்த தொடரில் டெல்லி அணி பெறும் இரண்டாவது வெற்றியாகவும் இது பதிவானது.

பாப் டூ பிளேசிஸ்

இதற்கிடையில் சென்னை அணியின் பாப் டூ பிளேசிஸ், இந்த போட்டியில் 43 ரன்கள் அடித்ததன் மூலம், இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் 173 ரன்களுடன் (மூன்று போட்டியில்) முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதனால் அவருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்பட்டது.

காகிசோ ரபாடா

அதேபோல் டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா, நேற்றைய அட்டத்தின் போது மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ரபாடா, இந்த சீசனில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி (இரண்டு போட்டிகளில்) பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதன் காரணமாக நேற்றைய போட்டிகு பிறகு காகிசோ ரபாடாவுக்கு ஊதா நிறத்தொப்பி வழங்க்கப்பட்டது.

இதையும் படிங்க:'ராயுடு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும்' - தோனி!

ABOUT THE AUTHOR

...view details