ஐபிஎல் தொடரில் இன்று (அக்.10) தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாகத் தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு ஏமாற்றமளிக்கும் விதத்தில் ஆரோன் ஃபிஞ்ச் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி - தேவ்தத் படிகல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் படிகல் 33 ரன்களில் வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த டி வில்லியர்ஸும் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினார்.