தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கடைசி ஓவரில் சொதப்பிய சிஎஸ்கே; வாய்ப்பை வெற்றியாக மாற்றிய டெல்லி! - ஐபிஎல் 2020

ஐபில் 2020, 34ஆவது லீக் போட்டியின் பந்துவீச்சில் கடைசி ஓவருக்கு முன்பு வரை சிஎஸ்கே வெற்றி பெற அதிக வாய்ப்பிருந்தது. கடைசி ஓவரை பிராவோவை வீசச் செய்யாமல் ஜடேஜாவிடம் அளித்தார் தோனி. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

IPL 13 CSK vs DC results
IPL 13 - CSK vs DC results

By

Published : Oct 18, 2020, 3:47 AM IST

Updated : Oct 18, 2020, 3:55 AM IST

ஷார்ஜா: 2020 ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் டாஸ் வென்றது. முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார் கேப்டன் தோனி. சிஎஸ்கே அணியின் புதிய தொடக்க வீரர் சாம் கர்ரன் மூன்றாவது பந்திலேயே டக் அவுட் ஆனார்.

அமைதி காத்த டூபிளெசிஸ்

அதன் பின் வாட்சன் - டுபிளெசிஸ் நிதான ஆட்டம் ஆடி ரன்களைச் சேர்த்தனர். டுபிளெசிஸ் 58 ரன்கள் எடுத்தார். வாட்சன் 36 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த தோனி 5 பந்துகளில் வெறும் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. அடுத்து வந்த அம்பதி ராயுடு அதிரடி ஆட்டம் ஆடி வந்த நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அதிரடி ஆட்டம் ஆடினார்.

சென்னைக்கு நிதானமாக ரன்களை சேர்த்த டூபிளெசிஸ்

இருவரும் கடைசி நான்கு ஓவர்களில் சிக்ஸ் மழைகளைப் பொழிந்தனர். அம்பதி ராயுடு 25 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். அவர் 4 சிக்ஸ் அடித்திருந்தார். ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். அவரும் 4 சிக்ஸ் அடித்திருந்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. இது டெல்லி அணிக்கு சவாலான இலக்காகவே கருதப்பட்டது.

தூணாக மாறிய தவான்

டெல்லி அணியின் தொடக்க வீரர் ப்ரித்வி ஷா முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த ரஹானே 8 ரன்கள் எடுத்து தன் வேலையை முடித்துக் கொண்டு கிளம்பினார். இவர்களுடன் நின்றிருந்த தவான் பொறுப்பாக நிதானமாக ஆடினார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயரும் நிதானமாக ஆடி 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி சதம் கடந்த ஷிகர் தவான்

விக்கெட்கள் சரிந்தாலும் தவான் மட்டும் அதிரடியாக ரன் குவித்து வந்தார். ஸ்டோய்னிஸின் 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கடைசி 4 ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது டெல்லி. அலெக்ஸ் கேரி, தவானுக்கு தோள் கொடுத்து ஆடினார்.

விறுவிறுப்புடன் வென்ற டெல்லி

கடைசி 2 ஓவர்களில் 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், அலெக்ஸ் கேரி 19ஆவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் டெல்லி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அப்போது அனுபவ வீரர் பிராவோ பந்து வீசுவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாந்து போனார்கள்.

சோகத்தில் தோனி

மாறாக, ஜடேஜாவிடம் பந்தை கொடுத்தார் தோனி. கடைசி ஓவரில் அக்சர் பட்டேல் 3 சிக்ஸ் அடித்தார். அக்சர் பட்டேல் சிக்ஸர்கள் அடிக்க டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஷிகர் தவான் சதம் கடந்தார். இதுவே அவரது முதல் டி20 சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Oct 18, 2020, 3:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details