தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன - கேப்டன் தோனி

அணியில் பெரிய ஷாட்களை அடிக்கும் வீரர்கள் இல்லாததே, தோல்விக்கு முக்கிய காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.

IPL 13: Batting has been a bit of a worry for CSK, admits Dhoni
IPL 13: Batting has been a bit of a worry for CSK, admits Dhoni

By

Published : Oct 11, 2020, 6:12 PM IST

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 25ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் ஆர்சிபி அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இப்போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, ''நாங்கள் பந்துவீசிய கடைசி நான்கு ஓவர்களில், ரன்களை கட்டுப்படுத்திருக்க வேண்டும். இந்த சீசன் முழுவதும் அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை சிறிது கவலையளிக்கும் விதத்தில் இருந்து வந்தது. ஆனால் அது இன்று வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.

பேட்டிங்கில் மிகப்பெரிய ஷாட்களை ஆடுவது அவசியம் என நினைக்கிறேன். அடுத்து வரும் போட்டிகளில் மிகப்பெரிய ஷாட்களை ஆட வேண்டும். ஆனால், கடந்த சில போட்டிகளாக நாம் எவ்வாறு விளையாடி இருக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் இது இருக்கிறது.

இந்தப் போட்டியில் 6ஆவது ஓவரிலிருந்து பேட்டிங்கில் சொதப்பிதாக நினைக்கிறேன். ஏனெனில் இப்போட்டியில் 6ஆவது ஓவரிலிருந்து 14ஆவது ஓவர் வரை பந்துவீச்சாளர்களின் திட்டத்துக்கு எதிராகச் சரியான தி்ட்டமிடல்களை வகுத்து பேட்ஸ்மேன்கள் களமிறங்கவில்லை என நினைக்கிறேன்.

நான் வீரர்களிடம் அடிக்கடி கூறுவது ஒன்றுதான். கடந்த போட்டியின் முடிவைப் பற்றி நினைத்தால் உங்களுக்கு சுமைதான் அதிகரிக்கும். தற்போது நடப்பில் உள்ள போட்டியின் மீதும், அதை எவ்வாறு வெற்றியாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துங்கள். பந்துவீச்சில் எதிரணியை நாங்கள் கட்டுப்படுத்தினோம். ஆனால், கடைசி 4 ஓவர்களில்தான் நாங்கள் தவறு செய்துவிட்டோம்.

சிஎஸ்கே கப்பலில் ஏராளமான ஓட்டைகள் உள்ளன. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அதிகபடியான சுழற்பந்துவீச்சாளர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்கிறார்கள். ஆனால், ஏதாவது ஒரு இடத்தில்தான் ஒருவர் விளையாட முடியும். முதலில் 5 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினோம். இப்போது 6 பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடுகிறோம். எங்களின் மிகப்பெரிய கவலை பேட்டிங்தான். அடுத்துவரும் போட்டிகளில் பேட்டிங்கைச் சரிசெய்ய தீவிரமாக முயல்வோம்'' என்று தெரிவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் பங்கேற்ற 7 போட்டிகளில் இரண்டு வெற்றியை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: நரைன் பந்துவீச்சில் சந்தேகம் - நடுவர்கள் புகார்!

ABOUT THE AUTHOR

...view details