தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!

By

Published : Oct 7, 2020, 4:21 PM IST

இந்தாண்டு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் அலிகான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.

Injured KKR pacer Ali Khan ruled out of IPL 2020Injured KKR pacer Ali Khan ruled out of IPL 2020
Injured KKR pacer Ali Khan ruled out of IPL 2020

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் லீக் ஆட்டங்களிலேயே விறுவிறுப்புக்குப் பஞ்சமின்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துவருகிறது.

இந்நிலையில், தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக கேகேஆர் அணியிலிருந்து விலகிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹென்ரி குர்னிக்குப் பதிலாக, அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் அலிகான் மாற்று வீரராக ஒப்பந்தம்செய்யப்பட்டார்.

மேலும் ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்நிலையில் அலிகான், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் சீசனிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இவர் இந்த சீசனில் கேகேஆர் அணி விளையாடிய எந்தப் போட்டியிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஹைதராபாத் அணியின் புவனேஷ்வர் குமார், டெல்லி அணியின் அமித் மிஸ்ரா ஆகியோர் காயம் காரணமாகவும் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கரோனாவால் வாழ்வாதாரத்திற்கு தவித்த விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு நிதியுதவி!

ABOUT THE AUTHOR

...view details