ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு துளியும் பஞ்சமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 25ஆவது லீக் ஆட்டத்தில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்த சீசனில் படுதோல்விகளை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடி, இரண்டு வெற்றி, நான்கு தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறது.
சீசன் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் சொதப்பிய நிலையில், தற்போது நடுவரிசை வீரர்களும் இணைந்து வெற்றி பெற வேண்டிய போட்டிகளைக் கூட தோல்விக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.
இதனால் இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில் மாற்றங்கள் வரவேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். அதிலும் கேகேஆர் அணியுடனான போட்டியின்போது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியடைச் செய்த கேதார் ஜாதவை அணியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பெரும்பாலான ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.
பந்துவீச்சுத் தரப்பில் கடந்த போட்டியில் கரண் சர்மா தனக்கு கிடைத்த வாய்ப்பைத் சரியாக பயன்படுத்தி, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியைத் தந்தார். வேகப்பந்துவீச்சில் சாம் கர்ரன், டுவைன் பிராவோ, சர்துல் தாக்கூர் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகின்றனர். இன்றைய போட்டியில் பெங்களூரு அணியை சிஎஸ்கே சமாளிக்குமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: