கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது தனது வர்ணனையில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஐபிஎல் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலிக்கு பந்து வீசிய வீடியோவைக் குறிப்பிட்டு, “சமீபத்தில் பொதுமுடக்கத்தின்போது அவர் அனுஷ்காவின் பந்துவீச்சுக்கு மட்டுமே பயிற்சி செய்த ஒரு வீடியோவைப் நான் பார்த்தேன். ஆனால், அது போதுமானதாக இருக்காது” என்று கூறினார்.
கவாஸ்கரின் கருத்துக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த அனுஷ்கா சர்மா, “கவாஸ்கர் உங்கள் கருத்து வெறுக்கத்தக்கது என்பது உண்மை. கணவரின் விளையாட்டுக்காக மனைவி மீது குற்றஞ்சாட்டுகிற இத்தகைய கடுமையான கருத்தை நீங்கள் தெரிவிக்க நினைத்தது ஏன்? இதைப் பற்றி நான் விளக்க விரும்புகிறேன். விளையாட்டில் கருத்து தெரிவிக்கும்போது, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் மதிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.