ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் ஆடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், வெற்றிக்காக ஹைதராபாத் அணி பெரும் போராட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியடைந்தால், கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், கொல்கத்தா அணியின் ரசிகர்கள் இந்தப் போட்டியை உற்று நோக்கியுள்ளனர்.