ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் நாளுக்கு நாள் திருப்பங்களை ஏற்படுத்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திவருகிறது. தொடர் மீதான எதிர்பார்ப்பும் பரபரப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.
இதற்கிடையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் செய்த மிகப்பெரும் மாற்றங்கள் சில, அணிகளுக்குச் சாதகமாகவும், அதேசமயம் சில அணிகளுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. அப்படி நடப்பு ஐபிஎல் சீசனில் ரசிகர்களை ஆச்சரியமளிக்கும் வகையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
தொடக்க வீரராக மாறிய ஸ்டோக்ஸ்:
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் சீசனில் தொடக்க வீரராக களமிறங்கிவருகிறார். அந்த அணியில் உத்தப்பா, சாம்சன், பட்லர் எனத் தொடக்க வீரர்கள் இருந்தபோதும் ஸ்டோக்ஸுக்கு அந்த வாய்ப்பானது கிடைத்தது.
தொடக்க வீரராக மாறிய ஸ்டோக்ஸ் தொடக்கத்தில் சோபிக்கத் தவறிய ஸ்டோக்ஸ், மும்பை அணிக்கெதிரான போட்டியில் ருத்ரதாண்டவமாடியதோடு சதமடித்தும் அசத்தினார். ராஜஸ்தான் அணியின் இந்தத் திடீர் மாற்றம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மிடில் ஆர்டரில் விளாசும் நரைன்:
மாயாஜால சுழற்பந்துவீச்சாளரான சுனில் நரைன், சில சீசன்களாக கேகேஆர் அணியின் பிரதான தொடக்க வீரராக களமிறங்கி, எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு வெளுத்து வாங்கினார்.
ஆனால் நடப்புச் சீசனில் அவரது பேட்டிங் குறித்து பெரும் கேள்விகள் எழத்தொடங்கியதை அடுத்து, நரைனை பந்துவீச்சாளராக மட்டுமே கேகேஆர் அணி பயன்படுத்திவந்தது.
டாப் ஆர்டரில் கலக்கும் மனீஷ் பாண்டே பின்னர் நடுவரிசை வீரராக களமிறங்கிய நரைன், அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் கேகேஆர் அணியின் வியூகம் சரிதானோ என்ற ஆச்சரியத்தில் ரசிகர்கள் திகைத்துள்ளனர்.
டாப் ஆர்டரில் கலக்கும் மனீஷ் பாண்டே
ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் மனீஷ் பாண்டே, கடந்த சீசன்களில் நடுவரிசை வீரராக மட்டுமே களமிறங்கி வந்தார். இது குறித்து தனது வருத்தத்தையும் அவர் பதிவுசெய்திருந்தார்.
மிடில் ஆர்டரில் விளாசும் நரைன் இதையடுத்து ஹைதராபாத் அணி நிர்வாகம் மனீஷ் பாண்டேவின் விருப்பத்திற்கேற்ப, டாப் ஆர்டரில் அவரை களமிறக்கியது. தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திய மனீஷ் பாண்டே, இப்போது ஹைதராபாத் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்துவருகிறார்.
அதிரடி மன்னனுக்கு ஏற்பட்ட அவமானம்
ஆர்சிபி அணியின் துருப்புச்சீட்டாக இருப்பவர் ‘மிஸ்டர் 360’ ஏபி டிவில்லியர்ஸ். தொடர்ச்சியாக தனது அதிரடியில் மிரட்டிவரும் டிவில்லியர்ஸ், ஆர்சிபி அணிக்குத் தேவைப்படும் நேரத்தில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளார்.
ஆனால் அவரை நடுவரிசையில் களமிறங்கவைத்த கொடுமையும் இந்தச் சீசனில் நடைபெற்றது. டாப் ஆர்டரில் மிரட்டிவந்த வில்லியர்ஸிற்கு மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கும் இது மிகப்பெரும் ஏமாற்றத்தை தந்தது.
அதிரடி மன்னனுக்கு ஏற்பட்ட அவமானம் பின்னர் தனது தவறை உணர்ந்த ஆர்சிபி அணி மீண்டும் டி வில்லியர்ஸை டாப் ஆர்டரில் களமிறக்கியது. பிறகென்ன அதிரடி மன்னனின் ஆட்டம் சரவெடியாக வெடிக்கத் தொடங்கவுள்ளது.
ரசிகர்களின் கோரிக்கையை ஏற்ற சிஎஸ்கே
நடப்பு ஐபிஎல் சீசனில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயம், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாதது. ஏனெனில் பத்து சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சிஎஸ்கே அணி, இந்தாண்டு லீக் போட்டிகளிலேயே படுதோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதனால் சிஎஸ்கே நிர்வாகத்தின் மீதும், அணியில் இருக்கும் ஒரு சில வீரர்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழந்தன. ஒரு கட்டத்தில் சாம் கர்ரனை ஏன் தொடக்க வீரராக களமிறக்கவில்லை என்ற குரலும் எழத்தொடங்கியது.
ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப சாம் கர்ரனை சீிஎஸ்கே அணி தொடக்க வீரராக களமிறக்கியது. ரசிகர்களின் எண்ணத்திற்கேற்றார்போல் அவரது இன்னிங்ஸும் சிறப்பாகவே அமைந்தது. சிஎஸ்கே அணியின் இந்த மாற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதுபோல் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதையும் படிங்க:கெய்ல், மந்தீப் அதிரடியால் மண்ணைக் கவ்வியது கேகேஆர்!