நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்விகளை சந்தித்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்துள்ளது.
அணியில் பேட்டிங் சரியாக இருந்தால், பந்துவீச்சாளர்கள் சொதப்புவது, பந்துவீச்சு சரியாக அமைந்தால் பேட்ஸ்மேன்கள் காலை வாருவது, அட, இரண்டுமே சரியாக அமைந்தால் பீல்டிங் சரியாக அமைவதில்லை. இப்படி பல தடைகளைக் கடந்து சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் அதை விட அதிர்ஷ்டம் வேறெதுவும் கிடையாது.
இதற்கிடையில் ராஜஸ்தான் அணியுடன் வாழ்வா, சாவா என்ற போட்டியில் சென்னை அணி இன்று (அக்.19) விளையாடி வருகிறது. இதில் சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி களமிறங்கியதன் மூலம், ஐபிஎல் தொடரில் 200 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற சாதனையை அவர் கடந்துள்ளார்.